காத்தாடிய பேட்ட திரையரங்கம் !! ஆளில்லாமல் வெறிச்சோடியதால் அதிர்ச்சி !!

Published : Jan 11, 2019, 09:26 AM IST
காத்தாடிய பேட்ட திரையரங்கம் !! ஆளில்லாமல் வெறிச்சோடியதால் அதிர்ச்சி !!

சுருக்கம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று வெளியான  நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் தியேட்டர்கள் வெறிச்சோடிக் காணப்படுவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

நேற்று வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளார். “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும்.

 

புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. ” என்ற அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சிகுமார், பாபி சிமஹா போன்ற பெரிய நட்சதிதிர பட்டாளமே  நடித்துள்ளது. கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள இப்படம் மிக நீளமாக இருக்கிறது என சிலர் குறை சொல்கின்றனர்


தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால்  ராசிபுரத்தில் சாமுண்டி, விஜயலட்சுமி ஆகிய இரண்டு திரையரங்குகளில் பேட்ட படம் வெளியானது.

 

இந்த இரண்டு திரையரங்குகளிலும் சொற்ப அளவிலேயே கூட்டம் இருந்ததால் திரையரங்கு வெறிச்சோடி காணப்பட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?