'பேரழகி ஐ.எஸ்.ஓ' பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் வெளியிட்டார்..!

 
Published : Feb 28, 2018, 06:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
'பேரழகி ஐ.எஸ்.ஓ' பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் வெளியிட்டார்..!

சுருக்கம்

perazhagi iso movie poster release

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '.

'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா'  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் 'காளி'  நாயகி  ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ்   உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 

'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்..

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  இப்படத்தின் இசை  மற்றும் பட வெளியீடு விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?