நிவின் பாலி படத்தில் இணைந்த பி.சி.ஸ்ரீராம்...

 
Published : Jul 17, 2017, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
நிவின் பாலி படத்தில் இணைந்த பி.சி.ஸ்ரீராம்...

சுருக்கம்

p.c. sriram working nivin pauly next tamil movie

பிரபல தயாரிப்பு நிறுவனம் 24am ஸ்டுடியோஸ், தங்களது மூன்றாவது படத்தை துவங்கியுள்ளனர். இப்படத்தை, பிரபல இயக்குனர்களான ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ் சிவனுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. இப்படத்தின் சிறப்பம்சம், இந்தியா சினிமாவே  போற்றி கொண்டாடும் PC ஸ்ரீராம் அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதாகும்.

'24am ஸ்டுடியோஸ்' RD ராஜா பேசுகையில், ''தேர்ந்த, பெரும் வெற்றிகளை பெற்ற இயக்குனர்களுடன் பிரபு ராதாகிருஷ்ணனை ஒப்பிடலாம். அவரது திறமையும்,சினிமா மீது இருக்கும் காதலும், வெற்றிக்காக வெறித்தனமாக உழைப்பதிலும் அவரது வெற்றி நிச்சயிக்க படுகிறது. இவரை போன்ற திறமைசாலிகளை அறிமுகப் படுத்துவதில் 24am ஸ்டுடியோஸ் பெருமை கொள்கிறது. சினிமாவின் வளர்ச்சிக்கு திறமையான இயக்குனர்களும் , நல்ல கதைகளும் மிகவும் அவசியம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்''

இயக்குனர் பிரபு ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''RD ராஜா அவர்களின் திறமையினாலும் அசுர உழைப்பினாலும் '24am ஸ்டுடியோஸ்' குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய  உயரங்களை தொட்டுள்ளது. ஒரு படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் அவர். இது ஒரு விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காதல் படம். PC ஸ்ரீராம் சார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

இந்த கதையில் காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் இருப்பதால் , ஒளிப்பதிவு பெரிய பங்கு வகிக்கும். இப்படத்தில் இசையின் பங்கு பிரதானமாக இருக்கும். அதனால் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு மிக முக்கிமானதாகவும், பேசப்படும் விஷயமாகவும் இருந்து இப்படத்திற்கு பலம் சேர்க்கும்.

 RD ராஜா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் இப்படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். அவருக்குள் இருக்கும் அந்த அருமையான கதாசிரியர் அவருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். இளைஞர்களை மிக பெரிய அளவில் கவர்ந்துள்ள நிவின் பாலி இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார். 'ப்ரேமம்' படத்தின் இமாலய வெற்றி அவருக்கு கேரளா, தமிழ் நாடு மட்டுமின்றி வடஇந்தியாவில் கூட ரசிகர்களை உருவாக்கியுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்  விரைவில் உறுதிசெய்ய உள்ளோம் என தெரிவித்தனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சின்ன மருமகள் சீரியல் நடிகை திடீரென மாற்றம்... அதிரடியாக களமிறங்கிய புது நடிகை யார்?
சேலையில் செம ஃபைட்டுக்கு ரெடியான சமந்தா... கம்பேக் படத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்