"பாதுகாப்பாக இருங்கள்... அன்பாக இருங்கள்..." இதுக்கு தான் இவ்வளவு பில்டப் செய்தாரா பார்வதி?

Published : Aug 16, 2018, 01:27 PM ISTUpdated : Sep 09, 2018, 07:29 PM IST
"பாதுகாப்பாக இருங்கள்... அன்பாக இருங்கள்..." இதுக்கு தான் இவ்வளவு பில்டப் செய்தாரா பார்வதி?

சுருக்கம்

பிரபல மலையாள நடிகையான பார்வதி, தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானவர்.

பிரபல மலையாள நடிகையான பார்வதி, தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானவர்.

இவர் ட்விட்டர், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருபவர். சினிமாவை பற்றிய கருத்துக்களை பதிவிடுவதை விட, பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் பற்றியும் பேசி வந்தார். மேலும் மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பிலும் பார்வதி முக்கிய பொறுப்பில் இருக்கிறார். குறிப்பாக பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்க முடியாது என போர்க்கொடி தூக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க சென்று வந்த இவர் சில காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்வதி கூறியுள்ளது... "இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடர்பவர்களுக்கும் எனது கருத்துக்களுக்கு பதில் சொல்பவர்களுக்கும் நன்றி. சமூக வலைத்தலத்தில் தொடர்ந்து என்னை நீங்கள் ஆதரித்து வருவது மகிழ்சியாக உள்ள்ளது. சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. சிறிது காலம் சமூக வலைத்தளத்துக்கு வரமாட்டேன். எல்லோரும் "பாதுகாப்பாக இருங்கள்... அன்பாக இருங்கள்..." என்று கூறியுள்ளார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?