’பருத்தி வீரன்’ சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல்... சேலத்திலிருந்து சென்னை விரைகிறார்

By sathish kFirst Published Nov 10, 2018, 1:20 PM IST
Highlights

பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்டுவரும் நடிகர் ‘பருத்தி வீரன்’ சரவணன் அவசர சிகிச்சைக்காக சேலத்திலிருந்து சென்னை விரைந்துகொண்டிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் ’91ல் ‘வைதேகி வந்தாச்சு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். ஆனாலும் அடுத்த 16 ஆண்டுகளுக்குப் பின் 2007ல் வெளிவந்த ‘பருத்தி வீரனில் பெரும்புகழ் பெற்று ‘பருத்திவீரன்’ சரவணன் ஆனார்.

கடந்த 3 தினங்களாக சாதாரண காய்ச்சல் என்ற எண்ணத்தில் சேலம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை  எடுத்து வந்த சரவணனுக்கு நேற்று இரவு நடந்த ரத்த பரிசோதனைக்குப் பின்னர்தான் அது பன்றிக் காய்ச்சல் என்பதே தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனே சென்னைபுறப்பட்டார் சரவணன்.

இதுகுறித்து பேசிய சரவணன்’’தீபாவளி பண்டிகை அன்று எனக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த பன்றிக்காய்ச்சலின் முதல்கட்ட பாதிப்பான புளூ காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறினர். தற்போது காய்ச்சல் குறைந்துள்ள நிலையில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறேன். இன்று பிற்பகல் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர உள்ளேன். விரைவில் பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு செல்வேன்’ என்கிறார்.

click me!