விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராக்கி.!

Published : Jun 15, 2025, 07:42 AM ISTUpdated : Jun 15, 2025, 07:44 AM IST
raaki prathepan raaki parthiban

சுருக்கம்

நடிகர் பார்த்திபனின் மகன் ராக்கி விரைவில் இயக்குனராக இருப்பதாக பார்த்திபன் சமூக வலைதளப் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். 

Director Parthiban :  

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். சென்னையில் பிறந்து வளர்ந்த பார்த்திபன், இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இயக்குனர் அவதாரம் எடுத்த அவர், 16 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். 14 படங்களை தயாரித்தும், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான ‘பாரதி கண்ணம்மா’, ‘நீ வருவாய் என’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘அழகி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஒத்த செருப்பு’ போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

பார்த்திபனின் தனிப்பட்ட வாழ்க்கை

1990 ஆம் ஆண்டு ‘புதிய பாதை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பார்த்திபனுக்கும், சீதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா, அபிநயா என்ற மகள்கள் உள்ளனர். பார்த்திபன் சீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். பார்த்திபனின் மூத்த மகள் கீர்த்தனா கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷயை திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராக்கி

பார்த்திபனின் மகன் ராக்கி தற்போது இயக்குனராக இருப்பதை பார்த்திபன் உறுதிப்படுத்தி இருக்கிறார். மகனின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ராக்கி பார்த்திபன் ! என் மகன், என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.

மகனை வாழ்த்திய பார்த்திபன்

அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!” எனக் கூறியுள்ளார். ராக்கி பார்த்திபனின் வளர்ப்பு மகன் என்றும் கூறப்படுகிறது. தந்தையைப் போலவே பெரிய இயக்குனராக வேண்டும் என்று பார்த்திபனின் ரசிகர்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்