
Anushka Shetty Ghaati Movie OTT Rights : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கடந்த 2006ஆம் ஆண்டு திரைக்கு வந்த ரெண்டு படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் திரைக்கு வந்த வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். பிறகு சூர்யாவின் சிங்கம், வானம், தெய்வ திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், சிங்கம் 3 என்று பல படங்களில் நடித்தார்.
ஆனால், பாகுபலி படம் தான் அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. ஒட்டு மொத்த சினிமாவும் திரும்பி பார்க்கும் வகையில் இந்தப் படம் இருந்தது. மேலும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இதே போன்று பாகுபலி 2 படமும் அமைந்தது. இந்தப் படங்களின் மூலமாக பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் கெமிஸ்டரி பெரியளவில் பேசப்பட இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அப்போது செய்திகள் வெளியானது.
ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தியாக இருந்தது. 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். இதற்கு அவரது உடல் எடை கூடியது தான் காரணமாக சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் சினிமா வாய்ப்புகள் இல்லை. Kathanar – The Wild Sorcere என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க, தற்போது ஆக்ஷன் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். இயக்குநர் கிரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள காட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், அனுஷ்கா உடன் இணைந்து விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்படியொரு ரோலில் அவரை பார்த்ததே இல்லை என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் ஓடிடி உரிமை தான் இப்போது பேசு பொருளாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் ஓடிடி உரிமையானது ரூ.36 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் ஹீரோயினை மையப்படுத்திய படம் அதிக தொகைக்கு ஓடிடியில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அப்படியொர் மகத்தான சாதனையை அனுஷ்காவின் காட்டி படம் படைத்துள்ளது.
https://www.youtube.com/watch?v=_yNbZEZx2RI
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.