நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா - அக்ஷய் திருமணத்தில் பிரபலங்கள் பலர் பங்கேற்பு...!

Asianet News Tamil  
Published : Mar 08, 2018, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா - அக்ஷய் திருமணத்தில் பிரபலங்கள் பலர் பங்கேற்பு...!

சுருக்கம்

parthiban seetha daugther keerthana marriage

நடிகர் பார்த்திபன்:

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவராலும் அறியப்பட்டவர் பார்த்திபன். இவருடைய இரண்டாவது மகள் கீர்த்தனாவிற்கும், அவருடைய காதலர் அக்ஷய் என்பவருக்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

கீர்த்தனாவின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட, கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

கீர்த்தனா இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா வாய்ப்புகள்:

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தபோது அந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டார். மேலும் இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் தற்போது உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். 

திருமணம்:

ஏற்கனவே கடத்த சில மாதங்களுக்கு முன் கீர்த்தனாவிற்கும் - அக்ஷய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் நடந்துள்ளது. அக்ஷய் ஒரு இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?