ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருக்கிறதா...? குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு...!

 
Published : Mar 08, 2018, 10:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருக்கிறதா...? குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு...!

சுருக்கம்

srievi life documentary film directed by sonamkapoor

 ஸ்ரீதேவியின் மரணம்:

இன்று வரை  நடிகை ஸ்ரீதேவி இந்த உலகில் இல்லை என்கிற உண்மையை பலரது மனது ஏற்க மறுக்கிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய இவரது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர், மற்றும் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது நாம் அறிந்ததுதான்.

துபாய்:

இவர் , தன்னுடைய நெருங்கிய குடும்ப நண்பர் திருமணத்திற்காக துபாய் சென்றார். திருமணம் முடிந்த நிலையில் மகள் ஜான்விக்காக ஷாப்பிங் செய்வதற்காக அங்கேயே இருக்க முடிவு செய்து பிரபல ஓட்டலில் தாங்கினார்.  

பின் திடீர் இவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தகவல்  வெளியானது. இதை தொடந்து ஸ்ரீதேவி குளியல் அறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிர் இழந்தார் என கூறப்பட்டதால் இவருடைய மரணத்தில் மர்மம் உள்ளதாக பல தகவல்கள் வெளியானது.

வதந்தி:

இப்படி வெளியான தகவல்கள் வதந்தி என அறிவித்தும் ரசிகர்கள் சிலர் இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவே கருதி வருகின்றனர்.

குடும்பத்தினர் முடிவு:

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விளக்கும் வகையில்... ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர் குடும்பத்தினர். 

இந்த ஆவணப்படத்தில் ஸ்ரீ தேவி பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள், அவர் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட அறிய புகைப்படங்கள், அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற இடங்கள் உள்ளிட்ட அறிய தகவல்கள் மற்றும் கடைசி நேரத்தில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்தும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தை பிரபல நடிகையும் ஸ்ரீதேவியின் உறவினருமான சோனம் கபூர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ
நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!