
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கபடி போட்டியாளர்கள் சிலர் விருந்தாளியாக வருகின்றனர். அவர்கள் முன் ஏற்கனவே காயத்ரி மற்றும் நமிதா இருவரும் இணைத்து ஜூலியை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர்.
துக்கம் தாங்க முடியாமல் ரூமில் அழுத்து கொண்டிருக்கும் ஜூலிக்கு ஆறுதல் கூறுகிறார் ஓவியா... இதை தொடர்ந்து அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு வரும் ஜூலி தனக்கு மிகவும் வயிறு வலிப்பதாக கூறுகிறார்.
என்ன ஆனது என அனைவரும் பதற்றத்துடன் கேட்ட அதற்கு காயத்ரி அது சும்மா டிராமா பண்ணும் என அலட்சியமாக கூறியதை தொடர்ந்து திடீர் என மிகவும் சத்தம் போட்டு வலியால் துடிக்கிறார் ஜூலி... வலியில் அவதிப்பட்ட ஜூலியை தூக்கி சோபாவில் வைத்து தண்ணீர் கொடுக்க முயலும் போது ஜூலிக்கு வலிப்பு வருவது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஒரு வேலை உண்மையில் ஜூலிக்கு உடல் நலம் முடியாமல் போனால் ஜூலி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார். இல்லை என்றால் இது அனைவரையும், பரபரப்பாக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்று தெரிந்துகொள்ளலாம். பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறது என்று..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.