காலாவை தொடர்ந்து யாரை இயகுகிறார் ரஞ்சித்..! வெளியான தகவல்..!

 
Published : Feb 14, 2018, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
காலாவை தொடர்ந்து யாரை இயகுகிறார் ரஞ்சித்..! வெளியான தகவல்..!

சுருக்கம்

pa.ranjith next movie announced

வட சென்னை மக்களின் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதில் வல்லவர் இயக்குநர் ரஞ்சித்.

அட்டகத்தி

இவர் இயக்கத்தில் முதலில் வெளியான படம் அட்டகத்தி.இதில் தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

காலா

அதன் பிறகு கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார்.இதில் கேத்ரின் தெரசா ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படமும் வடசென்னையில் எடுக்கப்பட்டது.மேலும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார்.இதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.அதன் பிறகு தற்போது மீண்டும் ரஜினியை வைத்து காலா என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் ஏப்ரல் 27 ம் தேதி ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

தயாரிப்பு

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் புரோடக்ஷன்ஸ் மூலம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.


ஃபஸ்ட் லுக் போஸ்டர்

இந்த படத்திற்கு 'பரியேறும் பெருமாள்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை ரஞ்சித் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.கதிர், ஆனந்தி,கலையரசன் என பலர் நடித்துள்ள படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!