கட்டப்பஞ்சாயத்தில் சிக்கிய ‘பஞ்சு மிட்டாய்’... மன உளைச்சலில் தயாரிப்பாளர்!

Asianet News Tamil  
Published : Dec 13, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
கட்டப்பஞ்சாயத்தில் சிக்கிய ‘பஞ்சு மிட்டாய்’... மன உளைச்சலில் தயாரிப்பாளர்!

சுருக்கம்

panchimittai movie release issuee

இயக்குனர் எஸ்.பி. மோகன் இயக்கத்தில், தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் கதாநாயகனாகவும், நிக்கிலா விமல் நாயகியாகவும் நடித்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் ‘பஞ்சு மிட்டாய்’.

‘கலர்று’ குறும்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ‘தீபம் சினிமாஸ்’ தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டி .இமான் இசையமைத்துள்ளார். இந்த மாதம் இறுதியில் இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் சார்பில், திரைப்படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவந்தனர்.

இந்நிலையில், திடீர் என செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் சங்க கட்டபஞ்சாயத்து காரணமாக "பஞ்சு மிட்டாய்" திரைப்படம் ரீலீஸ் நிறுத்தப்பட்டது.

இதனால் தயாரிப்பாளருக்கு இதுவரை விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட தொகை நஷ்டம் ஏற்பட்டதுடன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தயாரிப்பாளருடன் இணைந்து பத்திரிகையாளர்களை ஞானவேல்ராஜா இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!