பிரியங்கா சோப்ராவிற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு!

By manimegalai a  |  First Published Mar 5, 2019, 7:56 PM IST

புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி,  இந்திய துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.  இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். 
 


புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி,  இந்திய துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.  இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

Latest Videos

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.  உலக நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது,  இந்திய விமானப்படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.  இதில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவ நடவடிக்கையை இந்திய நடிகர், நடிகைகள், பலர் பாராட்டினர். நடிகை பிரியங்கா சோப்ராவும் வரவேற்றிருந்தார்.  இதனால் பாகிஸ்தானில் பிரியங்கா சோப்ராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பிரியங்கா சோப்ரா, யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார்.  இதன்மூலம் நடுநிலையாக செயல்பட வேண்டிய அவர்,  இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் எனவே இந்த பதவியை அவர் வகிக்கக் கூடாது என்று சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர் பாக்கிஸ்த்தானை சேர்த்தவர்கள். 

இந்தியப்படைகளுக்கு ஆதரவு தெரிவித்தால்,  யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும்,  இல்லாவிட்டால் அவரை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி 2200 பேர் கையெழுத்திட்டு ஆன்லைன் மூலம் யுனிசெப் மனு அளித்துள்ளனர். ப்ரியங்கா நீக்கப்படுவாரா அல்லது நீடிப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

click me!