
90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை நக்மா. படவாய்ப்புகள் குறைந்த நேரத்தில் அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழுநேரஅரசியலில் களமிறங்கினார்.
இதனால் சினிமாவை விட்டு அவர் நீண்டகாலமாக விலகியே இருந்தார். தற்போது மீண்டும் அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகை நக்மா 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இரண்டு தெலுங்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாகவும், அதில் ஒரு படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அம்மாவாக நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இவரிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த நக்மா "அதற்கான நேரம் வரும்போது, கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று தன்னுடைய திருமண ஆசையை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது 44 வயதாகும் இவர் இப்படி கூறியுள்ளது ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நக்மா நடிப்பில் 1995 ஆம் வருடம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வெளியான 'பாட்ஷா, திரைப்படம் தற்போது வரை எந்த திரைப்படங்களும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.