
நாலு வார்த்தை பேசினாலும் அதில் தவுசண்ட் வாலா சரவெடியை கொளுத்திப்போடும் வல்லமை படைத்த மனிதர்தான் நம்ம சு.சா! அதான் பாஸ், சுப்பிரமணிய சாமி!
பொதுவாக சக அரசியல்வாதிகளைப் பொளந்து கட்டி பொட்டலம் கட்டுபவரின் வாயில் லேட்டஸ்டாய் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பது ‘பத்மாவதி’ படம். இயக்குநர் ராஜமெளலியே ‘பத்மாவதி பட டிரெய்லர் என்னை பித்துப் பிடிக்க வைத்திருக்கிறது’ என்று அதன் மேக்கிங்கில் மெர்சலாகி கவிழ்ந்து கிடக்கிறார். அமிதாப், ஷாரூக் என்று பாலிவுட்டின் பாஷாக்கள் ஆளாளுக்கு கன்னாபின்னாவென கைதட்டி ரசிக்கிறார்கள் இந்த படத்தின் டிரெய்லரை.
இந்நிலையில் பத்மாவதி படத்தைப் பற்றி சென்சேஷனலாக வாய் திறந்திருக்கும் சுப்பிரமணிய சாமி “இந்த பத்மாவதி படத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருக்கிறது. முஸ்லீம் மன்னர்களை ‘ஹீரோ’க்களாக சித்தரித்து அவர்களுடன் உறவு கொள்ள இந்து பெண்கள் விரும்புவதாக திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்து பெண்களை இவ்வளவு கேவலமாக சித்தரித்து படமெடுக்க துபாயை சேர்ந்த சிலர் இங்கிருக்கும் இயக்குநர்களுக்கு பணம் தருகின்றனர். ராணி பத்மினியை மிக மோசமாக சித்தரித்து இந்தப்பட எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் இந்து மதத்தையும், இந்துப் பெண்களையும் பற்றிய மிக மோசமான கண்ணோட்டத்தை கொண்டிருப்பதோடு, அவர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை காட்டுகிறது.” என்று தாளித்துக் கொட்டியிருக்கிறார்.
கருத்துரிமையை தூக்கிக் கொண்டாடும் தேசம் நம் இந்தியா! மற்றவர்களுடைய பேச்சுக்களுக்கு எதிராக என்னதான் தான் வெடிகுண்டு விமர்சனத்தை வைத்தாலும் அதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படுவதில்லை என்பது சுப்பிரமணியசாமிக்கு தெரியும். அந்த அடிப்படையில்தான் பத்மாவதி படம் பற்றிய தனது கருத்தும் எடுத்துக் கொள்ளப்படும் என்று நினைத்திருந்தார்.
ஆனால் சு.சாவின் விமர்சனத்தை மிக அழகாக தங்கள் படத்துக்கான விளம்பரமாக்கிக் கொண்டிருக்கிறது பத்மாவதி டீம். மெர்சல்ல பட்டும் இன்னுமாய்யா நீங்க மாறல பி.ஜே.பி. துரைமார்களே!?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.