உலக அளவில் இன்னொரு பெருமையைத் தட்டிச் சென்ற கோவைத் தமிழன் ‘பேட்மேன்’ முருகானந்தம்...

By Muthurama LingamFirst Published Apr 21, 2019, 2:57 PM IST
Highlights

அமெரிக்க வார இதழ் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையின் பெருமை மிக்க தமிழன்  ’பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45வது இடத்தைப் பிடித்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.
 

அமெரிக்க வார இதழ் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையின் பெருமை மிக்க தமிழன்  ’பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45வது இடத்தைப் பிடித்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்று ’ஃபார்ச்சுன் (Fortune). இந்த வார இதழ் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தகத்
தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தங்கள் தயாரிப்பின் மூலம் சமூக மாற்றத்தையும், வித்தியாசத்தையும் கொண்டு வந்த வர்த்தக
நிறுவனங்களை தேர்வு செய்து இந்த பட்டியலை ஃபார்ச்சுன்  இதழ் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தலைசிறந்த தலைவர்களின் டாப் 50பட்டியலை நேற்று வெளியிட்டது. அந்தப்பட்டியலில் கோவையை சேர்ந்த பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் 45-வது இடத்தை பிடித்துள்ளார்.

கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலை நாப்கினை உருவாக்கியவர். இவரின் கதை கடந்த 2018ம் ஆண்டு ஆர். பால்கி இயக்கத்தில்  அக்‌ஷய்குமார் நடிப்பில் ஹிந்தியில் ’பேட்மேன்’ என்ற பெயரில் படமாகவும் வெளியானது. இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

அருணாச்சலம் முருகானந்தத்தின் மலிவு விலை நாப்கின் குறித்து உருவாக்கப்பட்ட ’பீரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படத்துக்கு டாகுமெண்டரி செக்‌ஷனில்  ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இவரது கண்டுபிடிப்பை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

click me!