முன்னணி ஹீரோ படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா விஜயசாந்தி?

Published : Apr 21, 2019, 02:39 PM IST
முன்னணி ஹீரோ படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா விஜயசாந்தி?

சுருக்கம்

80 மற்றும் 90களில் ஆக்சன் ஹீரோயின் என பெயர் எடுத்தவர், நடிகை விஜயசாந்தி. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.  

80 மற்றும் 90களில் ஆக்சன் ஹீரோயின் என பெயர் எடுத்தவர், நடிகை விஜயசாந்தி. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் நடித்த ஆக்சன் படங்கள், ஹீரோக்களின் ஆக்சன் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது. இதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.  

ரஜினிகாந்துடன் இவர் நடித்த 'மன்னன்' திரைப்படம் தற்போது வரை, பல தமிழ் ரசிகர்களால் ரசிக்கக்கூடிய படமாக இருந்து வருகிறது. இந்த படத்திற்கு பின் இவர் நடித்த,  ஒரு சில படங்கள் சரியாக ஓடவில்லை. 

இதனால் அரசியலில் குதித்தார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

தற்போது தீவிர அரசியலில் ஈடுபடுவதையும் குறைத்துக் கொண்டு மீண்டும் திரையுலகத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடிக்க உள்ள படம் ஒன்றில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜயசாந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு விஜயசாந்தி ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என கூறப்படுகிறது.  ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?