PA Ranjith speech : என் படத்துல வேலை பார்த்தவங்களுக்கு வாய்ப்பு தர மாட்றாங்க.. ஓப்பனாக போட்டுடைத்த பா.இரஞ்சித்

Ganesh A   | Asianet News
Published : Dec 20, 2021, 05:34 PM ISTUpdated : Dec 20, 2021, 05:45 PM IST
PA Ranjith speech : என் படத்துல வேலை பார்த்தவங்களுக்கு வாய்ப்பு தர மாட்றாங்க.. ஓப்பனாக போட்டுடைத்த பா.இரஞ்சித்

சுருக்கம்

பா.இரஞ்சித்திடம் (pa ranjith) உதவி இயக்குனராக பணியாற்றிய பிராங்கிளின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரைட்டர் (Writer) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.

தினேஷ், நந்திதா நடிப்பில் வெளியான அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதையடுத்து இவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். 

இவர் படம் இயக்குவது மட்டுமின்றி தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், குண்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அந்தவகையில், அவர் தயாரிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ரைட்டர்’ (Writer). இப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிராங்கிளின் இயக்கி உள்ளார். சமுத்திரகனி, மகேஸ்வரி, இனியா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.இரஞ்சித், தனது படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அவர் கூறினார். அவரின் இந்த பேச்சு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?