Valimai Censor Details: அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்திற்கு சென்சார் வழங்கிய சான்றிதழ் குறித்து வெளியான தகவல்!

Published : Dec 20, 2021, 02:57 PM ISTUpdated : Dec 20, 2021, 03:11 PM IST
Valimai Censor Details: அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்திற்கு சென்சார் வழங்கிய சான்றிதழ் குறித்து வெளியான தகவல்!

சுருக்கம்

நடிகர் அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள, 'வலிமை' படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

நடிகர் அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள, 'வலிமை' படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் 'வலிமை' திரைப்படம், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தயாராகி வந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. எனவே அஜித்தின் ரசிகர்கள் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது... இப்படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: Bharathi Kannamma Farina Azad: செம்ம கியூட்.. ஒருமாத குழந்தையை வைத்து விதவிதமான போட்டோ ஷூட் நடத்திய ஃபரினா!

 

'வலிமை' படத்தின் படபிடிப்பு முழுதும்  சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது அனைவரும் அறிந்ததே. தீபாவளிக்கு முன்னதாகவே 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டாலும், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படம் உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆனதால், 'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

மேலும் செய்திகள்: Neelima Esai Pregnancy Photos: நிறைமாத வயிற்றோடு எலிசபெத் ராணியாகவே மாறி.. நீலிமா எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்!

 

இதை தொடர்ந்து, இந்த வருட பொங்கலை தல பொங்கல் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தன்னை யாரும் தல என்றும், மற்ற பெயர்களை வைத்தும் அழைக்க வேண்டாம் என கூறி கடந்த மாதம் அதிர்ச்சி கொடுத்தார் அஜித்.  வலிமை படத்தை முடித்த கையேடு, பைக் ரெய்டில் பிசியாக இருந்த அஜித், மீண்டும் அடுத்தடுத்த பட பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித் தன்னுடைய 61 ஆவது படத்தையும், எச்.வினோத் இயக்கத்தில், மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த வித அதிகார பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: Catherine Tresa Latest Photos: கடற்கரையை சூடேற்றும் படு மோசமான உடையில்... ஜோராக போஸ் கொடுக்கு கேத்தரின் தெரசா!

 

'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக, படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி தற்போது வலிமை படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?