
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான தனுஷ் தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார். 2013- ல் வெளியான Raanjhanaa வை தொடர்ந்து தற்போது "Atrangi Re" படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அத்ரங்கி ரே'. கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா பகுதிகளில் நடைபெற்றது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளது. ஆனால், மீண்டும் அதிகமான கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகாவில்லை.
'அத்ரங்கி ரே' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. disney+ hotstar ஓடிடி தளம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. நேரடியாக இந்த ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி "Atrangi Re" வெளியாகும் என பாடக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர் மற்றும் இரண்டு சிங்கிள் வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவது சிங்கிளாக 'Garda' என்னும் பாடல் வெளியாகியுள்ளது. கலர்புல் பின்னனியில் உருவான இந்த பாடலுக்கான மாஸ் இசையை ஏஆர் ரகுமான் வடிவமைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்திலிருந்து Little Little சாங் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ளார். இதற்கான இசையை ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.