சுவாரசியமான எழுத்து, அற்புதமான கதையாக்கம்... கைதி படத்தை பார்த்து மெய்சிலிர்ந்து போன மெட்ராஸ் இயக்குநர்...!

By Asianet TamilFirst Published Nov 10, 2019, 2:14 PM IST
Highlights

சமீபத்தில் கைதி திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவினரை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். 

'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் 'கைதி'. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் 'கைதி'. தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக வந்தததால் 'கைதி' படத்திற்கு, ஆரம்பத்தில் 250 திரையரங்குகளே கிடைத்தன. இதனால், மிக குறைந்த தியேட்டர்களிலேயே வெளியான 'கைதி' படம், ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், தற்போது 350 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாடல், ஹீரோயின் இல்லாமல் முழுவதும் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய 'கைதி' திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பல தரப்பினரும் 'கைதி' திரைப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கைதி' படம், பாக்ஸ் ஆஃபிசில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இதன்மூலம், நல்ல கதையுடன் தரமான படமாக இருந்தால், எப்படிப்பட்ட சூப்பர் ஹீரோவின் பிரம்மாண்ட படத்திற்கு போட்டியாக வந்தாலும் ஜெயித்து விடலாம் என்பதை தமிழ் திரையுலகிற்கு 'கைதி' படம் உணர்த்தியுள்ளது. சமீபத்தில் கைதி திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவினரை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். 

சுவாரசியமான எழுத்து& அற்புதமான திரையாக்கம் மிகஇயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நேர்த்தியான ஒளிப்பதிவு துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

— pa.ranjith (@beemji)

அந்த பதிவில் "சுவாரசியமான எழுத்து, அற்புதமான திரையாக்கத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கும், மிக இயலாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதற்காக நடிகர் கார்த்திக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நேர்த்தியான ஒளிப்பதிவு, துணை கதாபாத்திரங்கள், இசை, தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்திய வேலைப்பாடு, துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் ஆகியோருக்கு வாழ்த்து" தெரிவித்துள்ளார். 

click me!