
தமிழ் சினிமாவில், தோல்வி படங்களே கொடுக்காத இயக்குனர் என்கிற லிஸ்டில் இணைந்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆன திரைப்படம் 'பைசன்'. வெற்றிகரமாக இப்படம் 10 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பதோடு, ரூ.100 கோடி வசூல் சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
தாழ்த்த பட்ட மக்களின் அவலங்களை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பேசிக்கொண்டிருக்கும் மாரி செல்வராஜ்... இந்த படத்தில், பிரபல கபடி விளையாட்டு வீரரும், அர்ஜுனா விருது வென்ற மணத்தி கணேசன் பற்றியும் அவர் சந்தித்த சவால்களையும், அப்போது அங்கிருந்த சூழல் குறித்தும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றிவிழா, நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் இந்த படத்தில் நடித்த துருவ் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை ரஜிஷா விஜயன் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் பா.ரஞ்சித்தும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, படம் குறித்தும் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றியும் பெருமையாக பேசினார்.
அப்போது தான், அறிமுக இயக்குனர் ஒருவரை பற்றி பா ரஞ்சித் பேசிய விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அறிமுக இயக்குனர் வேறு யாரும் அல்ல, கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி ரிலீஸ் ஆன 'நாளை நமதே' படத்தின் இயக்குனர் வெண்பா கதிரேசன் தான். இவர் இயக்கிய, 'நாளை நமதே' திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் அனைத்து மீடியாக்களுக்கு ப்ரீமியர் காட்சி போடப்பட்டது. படம் முடிந்த பின்னர், படக்குழுவினர் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
அப்போது தனியார் ஊடகத்தை சேர்ந்த ஒருவர், "ஏற்கனவே 2 இயக்குனர்கள் சினிமாவை சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என (பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜை) பெயர் குறிப்பிடாமல் சொல்லி, இப்போது நீங்களும் வந்துவிடீர்களா என கேட்டார். இதை கேட்ட இயக்குனர் வெண்பா கதிரேசன்... இது சீரழிப்பதற்கான படம் இல்லை. சீர்திருத்துவதற்கான படம் என பதிலடி கொடுத்தார்.
வெண்பா கதிரேசன் இயக்கிய 'நாளை நமதே' திரைப்படம், அரசியலில் பெண்களும் வலிமையானவர்கள் என்பதை எடுத்து காட்டி இருந்தது. அதே நேரம் சாதி ரீதியாக அரசியலில் ஒரு பெண் சந்திக்கும் அவலங்களையும் தோலுரித்திருந்தது. விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இந்த திரைப்படம், பெரிய காஸ்டிங் இல்லாததால் மக்களின் கவனத்தை கவர தவறி விட்டது. எனினும் இந்த மாதம் ஆஹா ஓடிடியில் வெளியாகி அதிகப்படியான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அதே போல் பா ரஞ்சித்தின் பேச்சுக்கு பின்னர், இவர் கூறியது யார் என்று வெண்பா கதிரேசன் பற்றி தேடி பிடித்து படித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.