
சபரிமலைக்கு 'நாப்கின்' கொண்டுபோய் புரட்சி செய்த ரெஹானா பாத்திமாவுடன் இயக்குநர் பா.ரஞ்சித் எடுத்த பழைய புகைப்படம் சமூகவைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கிய பின்னர், முதலில் சென்ற பெண் ரெஹானா பாத்திமா. ஒரு பெண் பத்திரிகையாளர் மற்றும் பாத்திமா இருவரும் சபரிமலை சென்றபோது அங்கு ஐயப்ப பக்தர்களால் தடுத்து அனுப்பப்பட்டனர்.
இந்தாண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கு தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேரள காவல்துறைக்கு மனு அனுப்பியுள்ளார் ரெஹானா பாத்திமா. ஆனால் ரெஹானா பாத்திமாவுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்க முடியாது என காவல்துறை மறுத்துள்ளது.
அதேபோல் சில நாட்களுக்கு முன் இந்துக்களை போல நச்சுத் தன்மை கொண்டவர்கள் யாரும் இல்லை என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்து இருந்ததும் சர்ச்சையானது. இந்நிலையில் பா.ரஞ்சித்துடன் ஒரு விழாவில் ரெஹானா ஃபாத்திமா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தப்புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டவை அல்ல. பல மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.