
ஜூலி பொய் சொன்னதை ஊருக்கே போட்டு காட்டி அசிங்கப்படுத்தினார் கமலஹாசன். ஆனால் ஜூலி இதில் ஓவியா பேசியது மட்டும் தான் உள்ளது என்றும் நான் பேசிய பகுதிகள் எடிட் செய்யப்பட்டுள்ளதாக மீண்டும் மற்றொரு பூகம்பத்தை கிளம்பினார்.
இதை தொடர்ந்து, ஜூலியின் மீது நம்பிக்கை வைத்த ஆரவை அழைத்து பேசியபோது முதலில் பேச்சை ஆரம்பித்தது நான் தான் என ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஓவியா ஜூலியிடம் வந்து நான் உன்னிடம் பேச வேண்டும் என கூற வெளியே செல்கிறார் ஜூலி... பின் அவர் பாத்ரூமில் எதோ சுத்தம் செய்துக்கொண்டிருக்கும் ஜூலியிடம் ஓவியா "இங்க பாரு ஜூலி நீ பேசுன வார்த்தையை ஒத்துக்கோ.. இல்லையென்றால் நீ வெளியே போகும்போது மக்கள் உன்ன காறி துப்புவாங்க" என கூறுகிறார்.
வெளியே வந்து இதை கூறி ஒரு பிரச்சனை பண்ணும் ஜூலியிடம் மீண்டும் பேச முயற்சிக்கிறார்... ஆனால் ஜூலி அதனை சுத்தமாக கண்டுக்கொள்ளாமல் காயத்ரியிடம் ஓவியாவை திட்டுவாங்க வைக்கிறார்.
ஜூலியிடம் உண்மையை சொல்லச்சொல்லி போராடியது, அலுத்து போக "போ... இனி உனக்கு எலிமினேஷன் தான்" என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.