
ஓவியா ஒரு நடிகை என்று அனைவருக்கும் தெரியும், அனால் அவர்கள் குடும்பத்தை பற்றி பெரிதாக யாரிடமும் சொல்லுவது இல்லை. பட விழாக்களில் கூட குடும்பத்தை பற்றி பேசுவதை தவிர்த்து விடுவார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், நடிக்காமல் மனதில் பட்டத்தை நடிகை ஓவியா பேசி வருவதால் அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.
இந்நிலையில் மிகவும் சாதாரணமாக சினேகனிடம் ஓவியா பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஓவியாவின் குடும்பத்தை பற்றி கேட்டார்.
அப்போது ஓவியா சிரித்துக்கொண்டே. நான் ஒரே பொண்ணு தான், வீட்டுல அப்பா, பாட்டி, மற்றும் ஒரு நாய் குட்டி இருக்கு. அம்மா ஒரு வருடத்துக்கு முன்னாடி இறந்து விட்டதாக கூறினார். மேலும் அவருக்கு கேன்சர் இருந்தது. நாலு வருஷம் டிரீட்மென்ட் போச்சு.. ஆனா காப்பாத்த முடியல என கூறினார்.
எப்போதும் சிரித்துக்கொண்டே ஓவியா இருப்பதால், மிகவும் சந்தோஷமான பொண்ணு, இவருக்கு எந்த ஒரு கஷ்டமும் இருக்காது என அனைவரும் நினைத்த போது இவருடைய வாழ்வில் இப்படி ஒரு சோகம் உள்ளதை அறிந்த பலர் ஓவியாவை இன்னும் உயர்வாக பார்ப்பதாக தங்களுடைய கமெண்டில் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.