
சினேகன் மற்றும் ஓவியா இருவரும் காதல் மற்றும் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் நமிதா... நானும் காதலுக்கு அடிமையாகத்தான் இருந்தேன் என கூறி தன்னுடைய காதல் அனுபவங்கள் பற்றி இருவரிடமும் கூறுகிறார்.
மேலும் தன்னுடைய ஒரு காதல் முறிந்து விட்டால், மீண்டும் இரண்டு மாதத்திற்குள் மற்றொரு காதலில் விழுந்து விடுவேன்... இது விளையாட்டான காதல் இல்லை உண்மையான காதல் அதுபோல தான் மூன்று முறை காதலித்துள்ளதாக கூறுகிறார்.
தன்னுடைய முதல் காதலில் 13 வருடம் காதலித்ததாகவும், இரண்டாவது முறை 2 மாதத்திற்கும் குறைவாக காதலித்தேன், மூன்றாவது முறை வெறும் 25 நாட்கள் தான் காதலித்ததாக கூறிய நமிதா தற்போது அந்த மூன்று காதலையும் நான் விட்டுவிட்டேன் என கூறுகிறார்.
முதல் காதல் தோல்வி வந்தபோது டிப்ரஷனில் இருந்ததாகவும், இரண்டாவதுகாதல் தோல்வியில் ஆன்மீகத்துக்கு மாறியதாகவும், மூன்றாவது காதல் தோல்வி உற்றபோது கவிஞனாகவே மாறிவிட்டேன் மேலும் இதற்கு மேல் வேண்டாம், காதல் வந்தால் தாங்கமாட்டேன் என்றும் கூறினார் நமிதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.