
பிக் பாஸ் போட்டியில் அனைவரையும் ஆட்டி வைத்து வருபவர் நடிகை ஓவியா... நாளுக்கு நாள் அவரது சேட்டைகள் அதிகரித்துகொண்டே போகிறது. அனைவரும் பிக் பாஸ் எதாவது சொன்னால் அதை மதிப்பார்கள் ஆனால் ஓவியா தன்னுடைய மனது கூறுவதை மட்டுமே கேட்பார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் ஓவியாவை வெறுப்பதால், ஓவியா நேற்று இரவு வெளியில் வந்து படுத்துவிட்டார். இதை பார்த்த சினேகன் ஓவியாவை வந்து சமாதானப்படுத்தினார் ஆனால் ஓவியா நீங்கள் போய் தூங்குங்க நான் வரவில்லை என கூறி விட்டார்.
இதனை தொடர்ந்து, ஓவியாவை உள்ளே வந்து தூங்குபடி பிக் பாஸ் வாய்ஸ் கூறுகிறது ஆனால் என்னால் வரமுடியாது என கூறிவிட்டார்.
பின் ஓவியாவை உள்ளே வந்து படுக்க சொல்லும்படி அனைத்து ஹவுஸ் மேட்ஸ்கும் ஒரு கடிதம் வருகிறது. இதை தொடர்ந்து ஆரவ் போய் ஓவியாவிடம் சமாதானம் பேச சிறிதும் அசராத ஓவியா வரமுடியாது என கூறுகிறார்.
பின் அவரே மனம் மாறி உள்ளே எழுந்து போய் தூங்காமல் ஆரவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். காலை எழுந்ததும் இதனை கேள்விப்பட்ட சக்தி இவள் ஒருத்தியால் யாரும் தூங்காமல் இருக்க வேண்டுமா இதனை பிக் பாஸ்ஸிடம் கூற வேண்டும் என மிகவும் கோபமாக கூறுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.