
'ஓவியா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலை இசையமைத்ததற்காக இலங்கை அரசின் 'சிறந்த இசையமைப்பாளர்' எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் என்பவர் பெற்றுள்ளார்.
இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு சிவா பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.
காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ' ஓவியா' என்னும் கதாப்பாத்திரத்தில்நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளரான சிவா பத்மஜன் அவர்களுக்கு இந்த வருடத்திற்கான 'சிறந்த இசையமைப்பாளர்' விருது இலங்கை அரசிடம் இருந்து கிடைத்துள்ளது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னரான ஆனந்த் அரவிந்தக்ஷன் இந்த பாடலை பாடியுள்ளார்.
ஜூன் 22 இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) 'சிறந்த இசையமைப்பாளர்' விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் அவர்களுக்கு வழங்கினார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் விஜய் டிவி டைடில் வின்னர் பாடிய பாடல் தேசிய விருதை பெற்றுள்ளதால் இதுவும் அந்த தொலைக்காட்சிக்கு ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.