
பிக் பாஸ் முதல் சீசனில் அனைத்து மக்களின் ஆதரவும் பெற்றாலும், காதல் பிரச்சினை காரணமாக திடீர் என வெளியேறியவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வைக்க முயற்சிகள் செய்தும் அது முடியாமல் போனது.
இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக வருவது போல் உள்ளே வந்து பிராங்க் செய்துவிட்டு பின் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது சீசனிலும் ஓவியா பிக் பாஸ் வீட்டிற்குள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் போட்டியாளராக இல்லாமல் 'களவாணி 2 ' படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விமல் மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே சண்டையால் அலங்கோலபடும் பிக்பாஸ் வீடு, ஓவியா விமல் வரும்போது ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.