
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு மாதத்திற்கும் மேல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்டு தனக்கென வெளியில் ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் ஓவியா.
இவரின் இயல்பான பேச்சு, அனைவரிடமும் தன்னுடைய கருத்தை மிகவும் தைரியமாக சொல்லுவது, மற்றும் முக்கியமாக யாரையும் பற்றி கோள் மூட்டாமல் இவர் நடந்து கொள்வதால் இவரை பிறருக்கு பிடிக்கும். இவரை போட்டியாளர்கள் தொடர்ந்து மூன்று வாரம் எலிமினேட் செய்ய நாமினேட் செய்தபோதும் கூட இவர் மக்களால் காப்பாற்ற பட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் இவர் ஒரு சில நாட்களாக அழுதுகொண்டே தான் இருக்கிறார். ஜூலியால் முதலில் அழ ஆரம்பித்து ஓவியா தொடர்ந்து தினமும் அழுது வருவது ரசிகர்களுக்கு ஜூலி மேல் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் கண்கள் மற்றும் முகம் சிவக்க இவர் தனியாக அமர்ந்து அழுத்துக்கொண்டிருந்தார். இவருக்கு சினேகன் சமாதானம் கூறியபோது இனி நான் இங்கு இருக்க முடியாது நான் வெளியே போகவேண்டும் இல்லை என்றால் எனக்கு பைத்தியமே பிடித்திவிடும் என கூறியுள்ளார்.
அனைவரும் அவரோடு பேசாமல் இருந்த போது கூட மன தைரியத்தோடு பிக் பாஸ்ஸில் கலக்கி வந்த ஓவியா திடீர் என இப்படி ஒரு முடிவெடுக்க காரணம் ஆரவ் அல்லது இத்தனை நாள் நல்ல தோழியாக நினைத்த ஜூலி இப்படி தன்னை பற்றி பொய் சொல்லி வருகிறார் என்கிற மன உளைச்சலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.