பணத்திற்காகவும், புகழுக்காகவும் சண்டையிடுவதை நிறுத்துங்கள்…! ஓவியாவின் அறிவுரை யாருக்கு தெரியுமா?

 
Published : Jun 19, 2018, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பணத்திற்காகவும், புகழுக்காகவும் சண்டையிடுவதை நிறுத்துங்கள்…! ஓவியாவின் அறிவுரை யாருக்கு தெரியுமா?

சுருக்கம்

oviya asks to stop fighting for money and fame

சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன், கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்த ஓவியாவும், பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஒருமுறை சிறப்பு விருந்தினராக சென்று வந்தார்.

அதன் பிறகு தற்போது ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் ”பணமும் புகழும் நாம் எதிர்பார்த்தபடி அதிக மகிழ்ச்சியை தராது. நமது மகிழ்ச்சியை தீர்மானிப்பது நமது மனம் தான். மனதிருப்தியும், சுய மதிப்பீடும் தான் கடைசியில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருகிறது. பணத்துக்காகவும் புகழுக்காகவும் சண்டையிடுவதை நிறுத்தி விட்டு, அன்பை பரப்புங்கள் அனைவரையும் நேசியுங்கள்” என தனது பதிவில் கூறி இருக்கிறார் ஓவியா.

திடீரென இந்த பதிவை அவர் வெளியிட காரணம் என்ன? ஒரு வேளை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அவருக்கு, முன்பு நடந்த கசப்பான அனுபவங்கள் தந்த பாடத்தை தான், அவர் இவ்வாறு கூறுகிறார் போல.

பிக் பாஸ் மூலம் பெயரும் புகழும் அடைந்து அதன் மூலம் தற்போது, அதிக பணமும் சம்பாதிக்கும் இவர், இப்படி அறிவுரை சொல்வது யாருக்கு? என யோசித்து பார்க்கும் போது, பிக் பாஸில் தற்போது கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் தான் நினைவிற்கு வருகின்றனர்.

பிக் பாஸ் பற்றி அறிந்து தெரிந்து அவர்கள் இங்கு வர காரணம் பணமும், புகழுமாக தானே இருக்க முடியும். அதனால் தான் ஓவியா இப்படி கூறி இருக்கிறார் போல.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!