மீண்டும் சூடு பிடிக்கும் ஓவியா - ஆரவ் காதல்...! நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது..!

 
Published : Feb 17, 2018, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
மீண்டும் சூடு பிடிக்கும் ஓவியா - ஆரவ் காதல்...! நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது..!

சுருக்கம்

oviya arav love again started vairal photo

பிக் பாஸ்:

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடியதன் . அதில் நடிகை ஓவியாவிற்கு அதிக பங்கு உண்டு. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் அனைவரும் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

ஓவியா:

பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினாலும், இவர்களில் அனைத்து ரசிகர்களின் இதயத்தையும் வென்றவர் நடிகை ஓவியா தான். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றப் போது பிரபல மாடலும், நடிகருமான ஆரவ்வை காதலிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் ஓவியாவை காதலிப்பது போல் பழகிய ஆரவ் தீடீர் என ஓவியாவை காதலிக்க வில்லை என கூறி கழட்டி விட்டார்.

காதல் தோல்வி :

காதல் தோல்வி அடைந்ததனால் துக்கம் தாங்க முடியாமல் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இப்படி வெளியேறிய ஓவியா மீண்டும் வீட்டுக்குள் வர வேண்டும் என ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சில காரணத்தால் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்பை தவிர்த்து விட்டார் ஓவியா.

சிங்கிள்:

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சில நாட்கள் கழித்து ஓவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் சிங்கிள் என ட்விட் செய்திருந்தார். இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுடன் ஓவியா:

தற்போது அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வரும் ஓவியா. ரசிகர்களின் அன்பிற்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வபோது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

ஓவியாவுடன் - ஆரவ்:

காஞ்சனா மற்றும் 90ml ஆகிய படத்தில் நடித்து வரும் ஓவியா சமீபத்தில், ஆரவ்வை சந்தித்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆரவ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தானாகவே ஆரவ் இதுபோன்ற புகைப்படத்தை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் மீண்டும் இவர்களுக்கும் காதல் சூடு பிடித்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த புகைப்படத்தை ஓவியா -ஆரவ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 
 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!