
களவாணி
களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஓவியா.இந்த படம் மட்டுமே அவருக்கு வெற்றியை தேடித் தந்தது.அதன் பிறகு இவர் நடித்த கலகலப்பு நல்ல வெற்றி பெற்றது.அதில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக ஓவியா நடித்ததால் பெரிதாக அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை.
ஜாக்பாட்
பெரிதாக மார்க்கெட் இல்லாமல் இருந்த ஓவியாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல கிடைத்த வாய்ப்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.அதில் இவரின் குழந்தைத் தனமான நடவடிக்கைகள்,வெளிப்படையான பேச்சு போன்றவை அனைவரையும் கவர்ந்தது.சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்தது.டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தார்.பெரும்பாலானோர் ஓவியாவுக்கே வாக்களித்தனர்.
முதலிடம்
இந்த நிலையில் சென்னை டைம்ஸ் பத்திரிக்கை 2017 ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது.
அதில் ஓவியா முதலிடத்தில் உள்ளார்.
ரசிகர்கள்
எத்தனை வருடங்கள் ஆனாலும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக்கன்னியாக உள்ள நயன்தாரா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.இதன் மூலம் நயன்தாராவை விட ஒரே நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை தனதாக்கி கொண்டிருக்கிறார் ஓவியா.இதில் ஹன்சிகாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.