ஆஸ்கர் விருது விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் ஆஸ்கர் விருதுக் கேடயம் போன்ற வடிவில் மீன் உணவுகள் பரிமாறப்பட்டன.
95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. தமிழ் ஆவணப்படமான 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படமும் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது.
இந்த ஆஸ்கர் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பிரத்யேகமான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கான மெனுவைத் தயாரித்தவர் மூத்த செஃப் வொல்ப்காங் பக். இவர் 29வது ஆண்டாக ஆஸ்கர் விருது விழா விருந்துக்கான மெனுவைத் தயாரித்துள்ளார். ஆடம்பரமான இரவு விருந்தில் வாயில் எச்சில் ஊற வைக்கும் சுவையான உணவுகளும் சிறந்த மது வகைகளும் இடம்பெற்றிருந்தன.
The Elephant Whisperers: ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகள் மாயம்!
பிரிட்டனைச் சேர்ந்த சமையல் கலைஞரான எலியட் க்ரோவர் தலைமையில் 115 சமையல் கலைஞர்கள் ஆஸ்கர் விழா இரவு விருந்துக்கான உணவை சமைத்துள்ளனர். மீன், மாட்டிறைச்சி, சிப்ஸ், சிக்கன் பை, ஐந்து வகையான பாஸ்தா, ஆசிய பாணியில் சமைக்கப்பட்ட வறுத்த கோழி ஆகியவை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டன.
குறிப்பாக ஆஸ்கர் விருது கேடயத்தின் வடிவில் தயாரிக்கப்பட்ட சால்மன் மீன் உணவான ஸ்மோக்டு சால்மன் ஆஸ்கர் மாட்ஸோ (Smoked salmon Oscar Matzo), ஜப்பானிய உணவான மியஜாகி வாக்யூ (Miyazaki Wagyu) ஆகியவை ஆஸ்கர் இரவு விருந்தில் பங்கேற்ற அனைவரையும் கவர்ந்தன.
Same Sex Marriage: தன்பாலின திருமணத்தை ஏற்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்