அடேங்கப்பா!! நம்ம துணை முதல்வர் ஓபிஎஸ் அஜித்துக்கு என்னம்மா வாழ்த்து சொல்லிருக்காரு பாருங்க...

Published : May 01, 2019, 02:46 PM IST
அடேங்கப்பா!! நம்ம துணை முதல்வர் ஓபிஎஸ் அஜித்துக்கு என்னம்மா வாழ்த்து சொல்லிருக்காரு பாருங்க...

சுருக்கம்

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இன்று மே 1ம் தேதியான இன்று நடிகர் அஜித்குமார் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அனிருத், வெங்கட் பிரபு, கஸ்தூரி சங்கர்,ப்ரேம்ஜீ, சிவகார்த்திகேயன், வைபவ், நயன் தாரா, விக்னேஷ் சிவன் என தல அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல KJR ஸ்டுடியோஸ், சன் நெட்வொர்க்,அனிரூத்,  திங் ம்யூசிக் உள்ளிட்டோரும் அல்டிமேட் ஸ்டாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், ''எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!'' என கூறியுள்ளார்.

அதேபோல இயக்குனர் சுசீந்திரன்,  “உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் வேண்டுதல்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Master Mahendran : என்னை திமிர் பிடித்தவன் என்று சித்தரிக்காதீர்கள்... உருக்கமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்
AR Rahman இசையில் இயக்குநர் வெங்கட் பிரபு பாடிய அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?