இந்தியாவுக்குள் வைரஸை மட்டுமே விரட்ட வேண்டும்... வந்தேரிகளை விரட்டக்கூடாது... இயக்குநர் நவீன் சூசகம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2020, 11:11 AM IST
Highlights

வைரஸை மட்டுமே விரட்ட வேண்டும் குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி மற்றவர்களை அனுப்புவதை ஏற்கவில்லை எனப் பொருள்படும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார். 

சமீபத்திய சுகாதரத்துறை தகவல்களின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 873 ஆக உயர்வு. 79 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் மரணமடைந்துள்ளனர்.

உலகையே உழுக்கி வரும் கொரரோனா வைரஸால்  பல லட்சம் பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் மிக தீவிரமாக பரவுவதை தடுக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மூடர் கூடம் இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேரிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது” என தெரிவித்துள்ளார்.

ஆக வைரஸை மட்டுமே விரட்ட வேண்டும் குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி மற்றவர்களை அனுப்புவதை ஏற்கவில்லை எனப் பொருள்படும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார். 

விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேரிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்க்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது

— Naveen Mohamedali (@NaveenFilmmaker)

 

இதற்கு கருத்து தெரிவித்துள்ள சிலர், உங்களை போல வந்தேரிகளை 1947 முன்பே விரட்டி அடித்து இருந்தால் இன்று நாங்கள் சி.ஏ.ஏ/என்.ஆர்.சி என்ற ஒரு சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது’’ என்றும் இந்தியா முழுவதும் வந்தேறிகளால் மட்டுமே பிரச்சனை’’ என பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். 

click me!