கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ துவங்கியுள்ளதால், 144 தடை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே பிழைப்பு என இருந்த பலர், சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி திறந்தவுடன்... பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் பெற்றோர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 3 மாத காலம் அவகாசம் தர வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குனர் சுசீந்திரன் கடிதம் மூலம் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.
நடிகர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சந்தானம்! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்..!இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...
"உயர்திரு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் அவர்களுக்கு, பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணம் கட்ட இயலாமல் தவிக்கிறார்கள். எனவே தாங்கள் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு கல்வி கட்டணங்களை செலுத்த 3 மாதங்கள் கால அவகாசம் பெற்றோர்களுக்கு தர அனுமதி வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
அந்த கடிதம் இதோ...