இந்த சூழ்ச்சியை முறியடிக்க, வளையல் விற்பவனாய், அவள் இருக்கும் இடத்துள் நுழைகிறான்
திரைப் பாடல் - அழகும் ஆழமும்- 5: வளைந்து வரும் காதலன்!
அவனும் அவளும் மனதார விரும்புகிறார்கள். ஆனால், வேறு ஒருவருடன், அவளுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க திட்டம் இடப்படுகிறது. இந்த சூழ்ச்சியை முறியடிக்க, வளையல் விற்பவனாய், அவள் இருக்கும் இடத்துள் நுழைகிறான் நாயகன்.
பூ, காய், பழம் விற்கும் பாடல்கள் எத்தனையோ உள்ளன. வளையல் விற்பதாய் அமைந்து இருக்கிறது இப்பாடல். இது மாதிரி பாடல்களில் 'மறைமுக' பொருள் படும்படி அமைப்பதே தமிழ்ச் சினிமாவின் இலக்கணம் ஆகி விட்டது. அதற்கு இங்கே இடம் இல்லை. எம்.ஜி.ஆர். படம் ஆயிற்றே... குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும், சுகங்களையும், மறைமுகமாக அல்ல; நேரடியாகவே சொல்கிறது.
'இருவர் - வளையலால் 'மூவர்' ஆவர்; மாமனாரை மாமியாரை சாமியாரா மாறிடுவர்... அறிமுகத்திலேயே கவிஞர் வாலியின் குறும்புத் தனம், கொடி கட்டிப் பறக்கிறது. 1964இல் வெளிவந்த படகோட்டி படத்தின் இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி. பாடியவர் - டி.எம்.சௌந்தராஜன். பாடல் இயற்றியவர் - கவிஞர் வாலி.
அந்தப் பாடல்:
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல் - அம்மா
பூவோடு வருமே பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்
வங்கி வளையல் சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க
அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால்
பித்தாக செய்யும் வளையல் - சில
சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல் (சித்தானை - சின்ன யானை)
அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால்
பித்தாக செய்யும் வளையல்
அன்ன நடை பின்னி வர சின்ன இடை
மின்னி வர முன்னாடி வரும் வளையல் - இது
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த
சித்திரத்தின் கையோடு வரும் வளையல்
பெண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா
மூணாகச் செய்யும் வளையல் - இது
ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தைக்
கட்டாயம் தரும் வளையல்
மாமனார மாமியார சாமியாரா மாத்திவிட
மந்திரிச்சுத் தந்த வளையல்
காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள்
கொஞ்சி வரத் தூதாக வந்த வளையல்
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இதையும் படியுங்கள்..
அத்தியாயம்:-1: உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்... அன்றே சொன்ன கண்ணதாசன்..!
அத்தியாயம்-2: எந்த ஹீரோவும் இப்படி செய்ததுண்டா..? எம்.ஜி.ஆரை போல முடியுமா..?
அத்தியாயம்-3 ஊமை பெண்ணின் கனவு... கவிதையாய் மொழி பெயர்த்த கண்ணதாசன்..!
அத்தியாயம்-4 சொற்களால் குதூகல ஆட்டம் போட வைத்த கண்ணதாசன்... மெட்டுப்போட்டு தேடி வர வைத்த எம்.எஸ்.வி..!