பிக்பாஸ் வீட்டிற்குள் போகப்போவது யார்? இந்த தேதியில் தெரிந்துவிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு... வீடியோ இதோ

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 24, 2020, 06:59 PM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் போகப்போவது யார்? இந்த தேதியில் தெரிந்துவிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு... வீடியோ இதோ

சுருக்கம்

அதை உறுதிபடுத்தும் விதமாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் அனைவரும் மரண வெயிட்டிங். இதுவரை விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட 2 புரோமோக்களும் தாறுமாறு வைரலாகின. கடந்த 3 சீசன்களை விட கொரோனா நெருக்கடி இருப்பதால் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

அதேபோல் நிகழ்ச்சியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த 3 சீசன்களில் 16 போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டிற்குள் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது  இந்த முறை, 12 போட்டியாளர்களுடன் 80 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி ஆகிய 6 சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் உள்ளார்களாம்.  இப்படி தினம் தினம் பிக்பாஸ் பற்றிய தகவல்கள் கசிந்து வந்த நிலையில், அக்டோபர் 4ம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

 

இதையும் படிங்க: அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

அதை உறுதிபடுத்தும் விதமாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் 4ம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது. இதோ அந்த வீடியோ.... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Draupathi 2: தடையை தாண்டி வசூல் வேட்டையாடும் திரௌபதி 2.! அனல் பறக்கும் விமர்சனமும் வசூல் கணக்கும்!
Rachitha Mahalakshmi : சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறாக போஸ் கொடுத்த ரச்சிதா.. எப்படி இருக்காங்க பாருங்க