
Nora Fatehi Car Accident : கனடாவைச் சேர்ந்தவர் நடிகை நோரா ஃபதேஹி. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பாகுபலி படத்தின் தமிழ் வெர்ஷனிலும், தோழா படத்தின் தமிழ் வெர்ஷனிலும் நோரா நடித்துள்ளார். தற்போது கூட ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் நோரா ஃபதேஹி பயங்கரமான கார் விபத்தில் சிக்கி அதிலிருந்து உயிர் தப்பி வந்துள்ளார். அம், மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது கார் மற்றொரு கார் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.
அவர், தனது காரின் பின் இருக்கையில் இடது புறத்தில் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது குடி போதையில் வேகமாக கார் ஓட்டி வந்த ஒருவர் அவரது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் அவருக்கு தலையில் லேசாக அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டுள்ளார். எனினும், பெரியளவில் பாதிப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த கார் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடி போதையில் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரது புரோகிராமின் படி இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு டான்ஸூம் ஆடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து நோரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பயங்கரமான விபத்து என்றாலும் கூட லேசான காயத்துடன் உயிர் தப்பினேன். யாரும் குடித்துவிட்டு மட்டும் கார் ஓட்டக் கூடாது. விபத்தின் போது உயிர் போய் உயிர் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.