எலெக்‌ஷன் முடியுற வரைக்கும் கரெக்‌ஷனுக்கு கூட வரமுடியாது!: கறார் கமல்ஹாசனால் பஞ்சரான ஷங்கர்! நைஸா நழுவுதா லைகா?

By Selvanayagam PFirst Published Mar 16, 2019, 6:52 AM IST
Highlights

ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் இயக்குநர் ஷங்கருக்கு கட்டம் மட்டுமில்லை வட்டம், சதுரம் என எதுவுமே சரியில்லை போலும். மிகப்பெரிய பில்ட் அப்களுடன் சில வருடங்களாய் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 2.O வர்த்தக ரீதியில் கைகொடுத்ததே தவிர மற்றபடி எந்த சந்தோஷத்தையும் கொண்டு வரவில்லை. 

இதில் பாதி சந்தோஷத்தை இழந்த ஷங்கர், தனது தயாரிப்பான ‘இம்சை அரசன்’ பார்ட் - 2, வைகைப்புயலின் ஒத்துழையாமை டார்ச்சரால் இழுத்துக் கொண்டே போய், கொலப்ஸ் ஆனதில் சில சதவீத நிம்மதியை இழந்தார். 

இந்த பஞ்சாயத்துகள் அத்தனையிலும் இருந்து விடுபட்டு, தன்னை புதுப்பித்துக்  கொள்ள அவர் கையிலெடுத்த ப்ராஜெக்ட்தான், அவரது பழைய மரணமாஸ் ஹிட்டான ‘இந்தியன்’ படத்தின் சீக்வெல். 

அரசியலுக்குள் நுழைந்துவிட்டதால் தன் சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்ல நினைத்த கமலும் ஒரு குட் சினிமாவை இறுதியாக கொடுத்துவிட்டு கிளம்பலாம் என நினைத்து இந்த ப்ராஜெக்டில் கையெழுத்திட்டார். 

கடந்த ஜனவரி மூன்றாவது வாரத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் சில நாட்கள் கூட அது தொடரவில்லை. காரணம் கமலுக்கான ‘இந்தியன் தாத்தா’ கெட்-அப் மேக்-அப்பில் ஷங்கருக்கு திருப்தியில்லை, அதனால் மேக் - அப் டீமை மாற்றுவதற்காக சின்ன பிரேக்! என்றார்கள். சில நாட்கள் முடிந்த  பின்னும் ஷூட் துவங்கவில்லை. கேட்டால் ‘புது மேக் - அப் மெட்டீரியலால் கமல்ஹாசனுக்கு முகத்தில் அலர்ஜி வருகிறது. எனவே மாற்று யோசனையில் இருக்கிறோம்!’ என்றார்கள். 

இப்படி இழுத்துக் கொண்டு போனதில் நாடாளுமன்ற தேர்தல் வைப்ரேஷன் துவங்கிட, கமல்ஹாசனும் தேர்தல் பணிகளில் மூழ்கிவிடார். பொது நிகழ்ச்சிகள், வேட்பாளர் தேர்வு என்று போய்க் கொண்டிருந்த கமல் ‘நானும் இந்த தேர்தலில் போட்டியிட போகிறேன்!’ என்று நெத்தியடியாய் அறிவிக்க, ஷங்கர்தான் நொந்தே போனார். 

காரணம், குறைந்தது ஏப்ரல் 20-ம் தேதி வரையில் கமல் ‘இந்தியன் 2’ செட்டினுள் வர வாய்ப்பே இல்லை. ஏப்ரல் 18-ல் தேர்தல் முடிகிறது. பிரசார அலைச்சலை காரணம் காட்டி குறைந்தது ரெண்டு நாளும், அதிகபட்சம் சில நாட்களும் கமல் ரெஸ்ட் எடுக்க வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், இந்தியன் -2 படத்தின் வசனங்களில் சமகாலத்துக்கு ஏற்ப சில திருத்தங்களை செய்த ஷங்கர், அதை கமலிடம் காட்டி ஒப்புதல் பெற அழைப்பு விடுத்தாராம். அதற்கு ‘எலெக்‌ஷன் முடியுற வரைக்கும் கரெக்‌ஷனுக்கு வர வாய்ப்பே இல்லை.’ என்று கமலிடமிருந்து பதில் வந்துவிட்டது. ஆக ‘ஏன்டா இந்த ப்ராஜெக்டில் கால் வைத்தோம்?’ என்று நோகிறார் ஷங்கர். 


இது போதாதென்று 2.O வில் செம்ம வசூல் என்றாலும் சில அசெளகரியங்களை சந்தித்ததால் நொந்து கிடக்கும் லைகா நிர்வாகம், அடுத்தடுத்து பெரிய ப்ராஜெக்ட்களில் கால் வைத்துள்ளதால் பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறதாம். இதனால் கமல்ஹாசன் இப்போது இந்த ப்ராஜெக்டில் டிலே செய்வதை அவர்கள் ரசிக்கிறார்களாம்.
 
ஆனால் ஷங்கர் நிலைதான் பஞ்சர்!

click me!