
நடிகை சுனைனா ஒருவருடன் மிகவும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிடவே, ரசிகர்கள் பலர் இவர்தான் உங்கள் காதலரை என சுனைனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு குமார் VS குமாரி என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. தமிழில் 2008ஆம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.
முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில், 'தெறி', 'காளி' போன்ற படங்கள் வெளியாகியது.
மேலும் தற்போது 'நிலா நிலா ஓடி வா' என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். அதேபோல் 'சில்லுக்கருப்பட்டி', 'எரியும் கண்ணாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சில வருடங்களாக சரியாக பட வாய்ப்புகள் இல்லாததால், இவர் திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் ஒரு சில செய்திகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், சுனைனா ஒருவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளது படுவேகமாக வைரலாகி வருகிறது.
ரசிகர்களின் கேள்விக்கு விரைவில் சுனைனா பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொறுத்திருப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.