
பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'பியர் பிரேமா காதால்' படம் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து... மீண்டும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம் இன்று வெளியாகியது.
ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் 'காளி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் படம் வெளியான இன்று, ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் பற்றி தெரிந்து கொள்ள, இந்த படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண், படத்தில் பயன்படுத்திய பைக்கில் அதே கெட்டப்பில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு விசிட் அடித்தார்.
முதலில் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளாவிட்டாலும், பின் 'ஹரிஷ் கல்யாண்' என கண்டு பிடித்ததும். அவருக்கு மாலை போட்டு வரவேற்று அசத்தி விட்டனர். இதுகுறித்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த படத்தை 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். பாலாஜி காபா தயாரித்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையில், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு கவின் ராஜ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.