ஷ்ஷ்ஷ்… அப்பாடா சோனம் கபூரால தனுஷுக்கு எந்த ஆபத்தும் இல்லை…’

Published : Oct 09, 2018, 03:49 PM IST
ஷ்ஷ்ஷ்… அப்பாடா  சோனம் கபூரால தனுஷுக்கு எந்த ஆபத்தும் இல்லை…’

சுருக்கம்

மேட்டர் இதுதான். சிறிது காலத்துக்கு இணைய தொடர்புகள் அனைத்திலிருந்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே செல்லவிருக்கிறாராம் சோனம்.

இந்தித்துறையில் ‘METOO’ என்கிற என்னிடமும் அத்துமீறினார்கள் ஹேஷ்டேக் தீப்பிடித்து வரும் நிலையில் பலரும் வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு அலைய, தனுஷ் வயிற்றில் குளிரக்குளிர பால் வார்த்திருக்கிறார் அவருடன் ‘ராஞ்சனா’ என்ற இந்திப்படத்தில் நடித்து கன்னாபின்னாவென்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை சோனம் கபூர்.

மேட்டர் இதுதான். சிறிது காலத்துக்கு இணைய தொடர்புகள் அனைத்திலிருந்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே செல்லவிருக்கிறாராம் சோனம்.

 விடைபெறும் வேளையில்"சில காலங்களுக்கு ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். ட்விட்டர் மிக எதிர்மறையாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும்" என  ஒரு சாமியாரிணி ரேஞ்சுக்கு பதிவிட்டுள்ளார். 

சோனம் கபூர் திடீரென்று இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு குறிப்பிடத்தக்க சம்பவம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பாலியல் பஞ்சாயத்து அதிகரித்து வருவதை ஒட்டியே, ரசிகர்களுக்கு இப்படி ஒரு துரதிர்ஷடமான, அவருக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு அதிர்ஷ்டமான முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

ஸோ, இப்போதைக்கு ஒரு இந்தி நடிகையிடமிருந்து ‘அத்துமீறல்’ ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறார் தனுஷ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!