
விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்' இந்த படத்தின் முதல் பார்வை திங்கள் கிழமை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வெளியாகியது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய்சேதுபதியை பார்த்த ரசிகர்கள், மற்ற நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு அழகான பெண் போலவே உள்ளார் என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் சிலரும் விஜய் சேதுபதிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எப்போதும் ஒரு படத்தின் போஸ்டர்கள் வெளியானால், அந்த படத்தின் போஸ்டரை மீம்ஸ் கிரியேட்டர்கள் தான், முதலில் கலாய்ப்பார்கள்.
ஆனால் எப்போதும் வித்தியாசமாகவே யோசிக்கும், சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா, மீம்ஸ் போடுபவர்களை தோக்கடித்து, சூப்பர் டீலக்ஸ் படத்தை அவரே கலாய்த்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாப்பாத்திரங்களை வைகை புயல் வடிவேலுவை வைத்து தயார் செய்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.