
Vijay Sethupathi - Puri Jagannadh Film Update : தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். இப்படத்தில் தபு மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த ஆக்ஷன் படத்தில் ராதிகா ஆப்தே நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் இந்த படத்தில் இல்லை என்று சமீபத்தில் உறுதிப்படுத்தினார். புதிய படத்தின் விளம்பரத்தின் போது, இதுகுறித்து அவர் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தார்.
தற்போது, நடிகை நிவேதா தாமஸ் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. '35' படத்தில் நடித்ததற்காக நிவேதாவுக்கு தெலங்கானா அரசின் கத்தர் விருது கிடைத்தது. இருப்பினும், நிவேதா தாமஸ் படத்தில் இருக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இது உறுதியானால் விஜய் சேதுபதி உடன் அவர் கூட்டணி அமைக்கும் முதல் படம் இதுவாகும். நடிகை நிவேதா தாமஸ் இதுவரை தமிழில் விஜய்யின் ஜில்லா, ரஜினியுடன் தர்பார், கமலின் பாபநாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் அவருக்கு கோலிவுட்டில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு கதையின் நாயகியாக அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த 35 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின்னர் தற்போது பூரி ஜெகன்நாத் படத்தில் நிவேதாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து பூரி கனெக்ட்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர்.
லைகர், ஐ 2 ஸ்மார்ட் போன்ற பெரிய தோல்விப் படங்களுக்குப் பிறகு, பூரி ஜெகன்நாத்திற்கு இந்தப் படம் கம்பேக் படமாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏப்ரல் மாதம் சேதுபதியுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து புதிய படத்தை அறிவித்தார். அனைத்து மொழிகளுக்கும் ஒரு பான்-இந்தியன் படமாக இது உருவாகிறது. படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆக்ஷன் படம் என்பதைத் தவிர, படத்தின் கதை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.