
’குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்தே நான் கமலின் தீவிர ரசிகை. ‘பாபநாசம்’ படத்தில் அவரது மகளாக நடித்தது என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கமுடியாத பாக்கியம்’ என்கிறார் இன்றைய வளர்ந்த நட்சத்திரம் நிவேதா தாமஸ்.
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் இன்று முன்னணி நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் நிவேதா தாமஸ். குழந்தை நட்சத்திரத்திலிருந்து ஹீரோயினாக புரமோஷன் ஆகியிருப்பது குறித்துப் பேசிய அவர், “எனக்கு சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரள அரசிடம் விருதும் வாங்கினேன். குழந்தை நட்சத்திரமாக வந்தவர்கள் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிவிட்டனர். சிலர் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டனர்.ஆனால் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போது கதாநாயகியாகவும் மாறி விட்டேன். நான் மலையாள குடும்பமாக இருந்தாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். இதனால் தமிழ், மலையாள மொழிகள் தெரியும், இப்போது தெலுங்கும் கற்றுக்கொண்டேன். சினிமாவில் கதைதான் ஆத்மா. கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.