நித்யா மேனன் ஓரின சேர்க்கையாளரா...? திரும்பி பார்க்கும் திரையுலகம்..!

Asianet News Tamil  
Published : Jan 20, 2018, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
நித்யா மேனன் ஓரின சேர்க்கையாளரா...? திரும்பி பார்க்கும் திரையுலகம்..!

சுருக்கம்

nithiyamenon acting lesbian character

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனனா இப்படி நடிப்பது? என்கிற அதிர்ச்சியில்  உறைந்துள்ளனர்  ரசிகர்கள்....

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் நித்யா மேனன் நடித்த வரும் ரோல் தான் இப்போது ஹாட் டாபிக்.

கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை சீய்... என கூறி ஏற்கக மறுத்த இவர்... இதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா...? என மூக்கு மேல் விரல் வைக்கின்றனர் ரசிகர்கள்.

தமிழில் விஜய்யுடன் இவர் ஜோடி போட்ட மெர்சல் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஜய்க்கு காதல் மனைவியாக, அன்பான அம்மாவாக அற்புதமாக நடித்திருப்பார்.

கவர்ச்சி என்றாலே பத்தடி தூரம் நின்ற நித்யாமேனன் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் தமிழில் இல்லை. தெலுங்கில்.தெலுங்கில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா கெசன்ட்ரா  நடித்துள்ள  படம் அவே.  இதில்  நித்யா மேனன் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறாராம். மேலும் சக நடிகையுடன் லிப் டூ லிப் காட்சியில் வேறு நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஓரினச்சேர்க்கை பற்றி படத்தில் இருப்பதால் சென்சார் பற்றிய பிரச்சனை வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக இந்த படத்தில் தான் நடிகை ரெஜினா போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கில்லி படத்தையே ஓரங்கட்டியதா? சூர்யா - த்ரிஷா மேஜிக்: 'மௌனம் பேசியதே' படத்தின் மெகா வசூல் விவரம்!
SK 26 பட டைட்டில் லீக்கானது... தமிழ் கடவுள் பெயரை தட்டிதூக்கிய சிவகார்த்திகேயன்..!