
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கப்பட்டு 2 வாரங்களை எட்டிய போதிலும், எந்த சுவாரஸ்யமும் இன்றி செல்வதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ப்ரோமோக்களில் பெரிய பிரச்சனை வெடிப்பது போல காட்டப்பட்டாலும் அவை அனைத்தும் தண்ணீரில் ஊறிய வெடி போல் சத்தமே இல்லாமல் முடித்து விடுகிறது என்பது வருத்தம்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெண்கள், ஆண்களுக்கு வேலை ஆட்களாக மாறி, ஆண் போட்டியாளர்களை முதலாளிகள் போல் கவனித்து கொள்ள வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
தற்போது இந்த டாஸ்க் முடிந்துள்ள நிலையில், ஆண் போட்டியாளர்கள் பெண்களுக்கு வேலை ஆட்களாக மாற வேண்டும் என்ற டாஸ்க்காக வந்துள்ளது. அதன் படி இனி பெண் போட்டியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல் ஆண்களை வேலை வாங்குகிறார்கள்.
நித்யா ஒரு படி மேலே போய், தன்னுடைய கணவர் பாலாஜியை தம்பி என்கிற முறை வைத்து அழைக்கிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நித்யா கண்ணாடியை பிடிக்க கூறியும், தனக்கு பால் எடுத்து வரும் படியும் தம்பி தம்பி என அழைத்து பாலாஜிக்கு பல வேலைகள் கொடுக்கிறார்.
இதைதொடர்ந்து நித்யா நான் எதுவும் பண்ண கூடாது என்றால் ஏன்..? இந்த வீட்டில் இருக்க வேண்டும் என கூறுவதும் காட்டப்படுகிறது.
இவர் இப்படி புலம்புவதற்கு காரணம் பாலஜியாக தான் இருக்க வேண்டும் என்றும், இந்த டாஸ்கை காரணமாக வைத்து நித்யா ஓவராக பாலாஜியை நடத்தியதால், பாலாஜி இவரை செமையாக திட்டி வெச்சி செஞ்சிருப்பார்... அதனால் தான் நித்யா புலம்பி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.