முதல் மனைவி மற்றும் மகனுக்காக என்ன செய்தார்? நித்யா நறுக் கேள்வி..! பாலாஜியின் பதில் என்ன?

Published : Aug 30, 2018, 03:19 PM ISTUpdated : Sep 09, 2018, 08:19 PM IST
முதல் மனைவி மற்றும் மகனுக்காக என்ன செய்தார்? நித்யா நறுக் கேள்வி..! பாலாஜியின் பதில் என்ன?

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டிருந்த காமெடி நடிகர் தாடி பாலாஜி அந்த நிகழ்ச்சிக்கு வரும் போதே தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இணைந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ஆனால் அவர் நினைத்தது போல எதுவும் இது வரை நடக்கவில்லை. 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டிருந்த காமெடி நடிகர் தாடி பாலாஜி அந்த நிகழ்ச்சிக்கு வரும் போதே தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இணைந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ஆனால் அவர் நினைத்தது போல எதுவும் இது வரை நடக்கவில்லை. கடைசிவரை நீயும் நானும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறி வழக்கம் போல டாட்டா காட்டி விட்டார் அவரது மனைவி நித்யா.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். ஆனால் பாலாஜிக்கு மட்டும் நித்யாவிடம் இருந்து ஒரு கடிதம் தான் வந்தது. அதனுடன் அவர் மனைவி மகளின் புகைப்படமும் ஒரு பொம்மையும் இருந்தது. அவற்றை பார்த்து மனமுருகிய பாலாஜி, மீண்டும் தன் குடும்பம் நினைத்து கலங்கி இருந்தார்.

இதை பார்த்த நித்யா தற்போது ஒரு அதிர்ச்சியான தகவலை கூறி இருக்கிறார். அதில் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். எனக்காகவும் போஷிகாவிற்காகவும் இவ்வளவு தூரம் வருத்தப்படும் பாலாஜி, இன்றுவரை ஒரு முறை கூட அவர்களை நினைத்து பார்க்காதது ஏன்?
அவரின் மகன் தருணும் சின்ன பையன் தான் அவனுக்கும் தன் அப்பா தன் மீது பாசம் காட்ட வேண்டும் என்ற ஏக்கம் இருக்காதா? போஷிகாவிற்காக இவ்வளவு உருகும் அவர் தருண் பற்றி ஒரு முறை கூற வருத்தப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கிறார். 

பாலாஜிக்கு இன்னொரு மகன் இருக்கும் விஷயமே இப்போது நித்யா கூறிய பிறகு தான் வெளி உலகிற்கு பிரபலமாகி இருக்கிறது.
 உண்மையில் அவர் ஏன் அவ்வாறு தருண் குறித்து பேசியதே இல்லை என்பது பாலாஜியே கூறினால் மட்டுமே தெரியவரும்.
இப்படி எல்லாம் கூறி விட்டு தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கும் நித்யா வந்திருப்பதும் அவருடன் சேர்ந்து வாழ தயாராவது போல் நடந்துக் கொள்வதும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!